ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாடும் எனத் தெரிவித்தார்.
பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது எனக் கூறிய ராஜ்நாத் சிங், தீவிரவாத செயல்களின் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் கோழைத்தனமான செயலை செய்துள்ளனர் எனக் கூறிய ராஜ்நாத் சிங், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விட மாட்டோம் எனவும் சூளுரைத்தார்.