தவறு செய்யும் அமைச்சர்களை கட்டிக்காக்கும் மாடல் அரசாகவும், ஜெயிலில் பெயில் கிடைத்தவுடன் அமைச்சராக்கி அழகு பார்க்கும் அரசாகவும் திமுக அரசு உள்ளது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூரில் பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மேடையில் பேசிய வானதி சீனிவாசன், குடிமகன் தவறு செய்தால் எப் ஐ ஆர் போடும் அரசு அமைச்சர் பொன்முடியை மட்டும் பாதுகாப்பதாகக் கூறினார்.
தவறு செய்யும் அமைச்சரை கட்டிக்காக்கும் மாடல் அரசாகவும், ஜெயிலில் பெயில் கிடைத்தவுடன் அமைச்சராக்கி அழகு பார்க்கும் அரசாகவும் திமுக அரசு உள்ளது எனவும் விமர்சித்தார்.
இதேபோல் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கிருஷ்ணகிரியில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டுமென பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.