முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.