வெற்றி கோப்பையுடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்தது.
இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் தனது அணியுடன் கலந்துக் கொண்டார்.
இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், வெற்றிக் கோப்பையுடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பகிர்ந்துள்ளது.