என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர் மீது பதியப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.