சீனாவில் கார் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகச் சீனா திகழ்கிறது.
இங்கு கார்கள், ரோபோ என தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிது புதிதாக கார்களை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதை வைத்து பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஷாங்காயில் நடைபெற்ற கண்காட்சியில் விதவிதமான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றைக் காணத் திரளான மக்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.