திருச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான கடையோடு இணைந்து பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கற்குவேல் என்பவர் தனது நண்பர் சரவணனுடன் மது அருந்தச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சுப்பிரமணி, ராஜு, கண்ணாயிரம் ஆகியோர் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர். இதனைச் சரவணன் தட்டிக்கேட்ட நிலையில், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சரவணன் தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் கற்குவேலை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.