திருப்பூர் அரசு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த விகாஸ் பர்வன் என்பவர் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது காலில் அடிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பெற விரும்பாத விகாஸ் பர்வன், அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார். நுழைவாயிலில் காவலர்கள் நிற்பவனைக் கண்ட அவர், மருத்துவமனையின் 4வது மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.