திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான விவசாயங்களில் ஒன்றாக விரிச்சிப் பூ சாகுபடி திகழ்ந்து வருகிறது. சுமார் 400க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குமாரா வயலூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்ட வேர்ப்பூச்சி தாக்குதல், அடுத்தடுத்த நிலத்திற்கும் பரவி ஏராளாமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூ சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்
திருச்சியில் எட்டரை, அந்தநல்லூர், கோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த விரிச்சிப் பூ மாலை கட்டுவதற்கும், கோவில் திருவிழா காலங்களில் அலங்காரப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரை ஏற்றுமதி செய்யப்படும் இந்த விரிச்சிப் பூவில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.
பயிரிடப்பட்ட மூன்று மாதங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 கிலோ அளவிற்குப் பூக்களைத் தரும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் வேர்ப்பூச்சி தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக இருக்கும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டும் பூச்சித் தாக்குதல் குறித்தோ, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ தோட்டக்கலைத்துறை எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்
ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.
விரிச்சிப் பூ சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து சாகுபடியை பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.