விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!
Oct 2, 2026, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான விவசாயங்களில் ஒன்றாக விரிச்சிப் பூ சாகுபடி திகழ்ந்து வருகிறது. சுமார் 400க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குமாரா வயலூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்ட வேர்ப்பூச்சி தாக்குதல், அடுத்தடுத்த நிலத்திற்கும் பரவி ஏராளாமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூ சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

திருச்சியில் எட்டரை, அந்தநல்லூர், கோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த விரிச்சிப் பூ மாலை கட்டுவதற்கும், கோவில் திருவிழா காலங்களில் அலங்காரப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரை ஏற்றுமதி செய்யப்படும் இந்த விரிச்சிப் பூவில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பயிரிடப்பட்ட மூன்று மாதங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 கிலோ அளவிற்குப் பூக்களைத் தரும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் வேர்ப்பூச்சி தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக இருக்கும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டும் பூச்சித் தாக்குதல் குறித்தோ, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ தோட்டக்கலைத்துறை எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.

விரிச்சிப் பூ சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து சாகுபடியை பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: விவசாயிகள்Rootworm attack on Virichipoo plants: Farmers in a state of shockவேர் பூச்சி தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு : துரைமுருகன் விடுவிப்பு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies