பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் என்பவர், வயிற்றில் குண்டடிபட்டு படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் அனந்த்நாக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து பரமேஸ்வரன் ஸ்ரீநகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.