கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகக் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானார்.
2017ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 400க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானை நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானார்.