உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அதிவேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
செலாக்கி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட 8 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.