இந்தியாவுடனான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் இதற்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்த நிலையில், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடனான அனைத்து வித வர்த்தகங்களுக்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட போரை நிறுத்த 1972-ல் போடப்பட்ட, சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்த நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.