ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர், நேபாளத்தின் புட்வால் பகுதியைச் சேர்ந்த சுதிப் நியூபேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுதீப், தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனருடன் பஹல்காமிற்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தார். பயங்கரவாதிகள் சுதீப்பைச் சுடுவதற்கு முன்பு அவரது மதம் குறித்துக் கேட்டு, இந்து என உறுதிப்படுத்திக் கொண்டு சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சகம், அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.