அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேர் ஆஜராகச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட 2 ஆயிரத்து 222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, ஜனவரி 6-ம் தேதி முதல் அவர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வழக்கானது சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல் ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததையடுத்து, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேர் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை மே 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.