இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த பி.கே.சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182-வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவர் வெயில் அதிகம் இருந்ததால் அங்கிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து நிழலில் அமருவதற்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் பி.கே.சிங் எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கைது செய்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் பி.கே.சிங்கை மீட்பதற்காக ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.