பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிரணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அதில் இந்திய ராணுவத்தையும், பாஜகவையும் விமர்சிக்கும் விதமான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.