திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பேட்டியறித்த அவர், அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
அமைச்சர் பொன்முடி இந்து மதம் மற்றும் பெண்களை பற்றி இழிவாக பேசியதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்வதை அவர் சுட்டிக்காட்னார்.
திமுக ஆட்சியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் பயப்படும் நிலை உள்ளதாகவும், திமுக ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் மக்களுக்கு நிம்மதி அடைவார்கள் என டிடிவி தினகரன் குறிப்பிட்டார்,