உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி வருகிறார். அந்த வகையில், நான்காவது ஆண்டாக இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டு, 2 நாள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.