காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ஓசூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.