காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
சிறிய அளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.