சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடடிவக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நடவடிக்கையால் கடுமையான பாதிப்புகளை பாகிஸ்தான் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.