டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவு இந்திய விஞ்ஞான துறைக்கு பேரிழப்பு என்று தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில்,
நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய, பெருமதிப்பிற்குரிய டாக்டர் கஸ்தூரி ரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களது மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.