சேலத்தை மையமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சாப்ட்வோர் இன்ஜினியர்களுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 10 கோடி ரூபாய் மேசாடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக பிருந்தாவன் சாலையில் உள்ள கோனாக்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனம் மீது சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர்.
உரிய விசாரணை நடத்தித் தங்களுடைய பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.