இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜம்மு-காஷ்மீர் சென்றடைந்தார்.
ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாதிகளுக்கு எதிராக படைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தது உள்ளிட்டவைகளை ராணுவ அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.