3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஏஓ, இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.
இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வின் மூலம் 3 ஆயிரத்து 935 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தேர்விற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.