மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கட்டக்காளை பட்டியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயிலில் அன்னதான விழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மொத்தம் 26 ஜோடி இரட்டை மாடுகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளைச் சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நினைவு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.