தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இருடியம் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் தங்களிடம் ஒரிஜினல் இருடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி பலரிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த வாகனங்கள், கெமிக்கல், செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.