பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீடு வெடித்து சிதறும் காட்சி வெளியாகி உள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து தீவிரவாதத் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீட்டில் ராணுவத்தினர் ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது அங்கு இருந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.