இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 1994 முதல் 2003-ம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்த நிலையில், 84 வயதான கஸ்தூரி ரங்கன் உடல்நலக் குறைவு காரணமாகப் பெங்களூருவில் காலமானார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள அவர், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.