நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த புதூர் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதூர் கிராமத்தில் இருந்து வீரவநல்லூர் செல்லும் 3 கிலோ மீட்டர் சாலையைப் புதுப்பிப்பதற்காகக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டதால், அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதால் விபத்து நேரிடும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அவதியடைந்து வரும் அப்பகுதி மக்கள், சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.