பதட்டமான சூழ்நிலை மேலும் மோசமாவதைத் தடுக்க இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகளைப் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு உறவு மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என் கேட்டுக்கொள்வதாகவும் அண்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.