காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இருந்து உயிர்தப்பி சொந்த ஊர் திரும்பியவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சையது உஸ்மான், சையது ரகுமான் உட்பட 6 நண்பர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர்.
அப்போது காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நண்பர்கள் 6 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய அவர்களை மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.