பஹல்காம் தீவிரவாத சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக பிடிக்க வேண்டும் எனறும், கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்
மீண்டும் இதுபோன்ற செயலை செய்ய கனவிலும் நினைக்கக்கூடாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.