டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது அல்ல எனவும் தொடர்ந்து சோதனை நடத்தலாம் எனவும் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.