சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கட்சியினரிடையே அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
















