பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள்,ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தி அரபிக் கடலில் உள்ள எதிரிகளுக்கு இந்தியா ஒரு வலுவான செய்தியை அனுப்பியது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் கடலில் இருந்த ஒரு இலக்கை ஏவுகணை மூலம் அழித்தது.
அரபிக் கடலில் பாகிஸ்தான் யிற்சிகளைத் தொடங்கியதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை, விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடலில் நிறுத்தியது. மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் விக்ராந்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில்,இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று ஸ்ரீநகருக்கு சென்றார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனால் பாகிஸ்தான் கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.