பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருவதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மோசமான நிலையை அடைந்தும் கூட பாகிஸ்தான் ஒரு போதும் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை வளர்க்கும் மையமாக மட்டுமே பாகிஸ்தான் இருந்து வருவதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.