மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனமானது, வரும் மே 15ம் தேதியன்று அப்டேட் செய்யப்பட்ட யெஸ்டி அட்வென்சர் பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.
இந்த பைக்கில் 29.6 hp பவர் மற்றும் 29.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 334 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பைக் தற்போது நிறத்திற்கு ஏற்ப, 2 லட்சத்து 10 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான விலையில் நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்படுகிறது. புதிய வேரியண்டின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.