ஆப்பிளின் ஐபோன் 17 தொடர் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில், அது தொடர்பான பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் பரவி வருகின்றன.
கேமராவைப் பொறுத்த வரையில், ஐபோன் 17-க்கு 24 மெகாபிக்சல் கொண்ட முன்புற கேமராவை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், பின்புறம் வழக்கம் போல 48 மெகாபிக்சல் மெயின் கேமராவே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது 5x டெலிஃபோட்டோ ஜூமை கொண்டிருக்காது.