கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய ரோபோ நாயான சம்பக் உடன் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த வீடியோவை, சுனில் கவாஸ்கர் ஒரு புதிய நண்பரைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது என்ற தலைப்புடன் ஐபிஎல் சமூக ஊடகக் குழு வெளியிட்டது.
இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் சுனில் கவாஸ்கரின் செயல் குறித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.