புதுச்சேரியில் அடகு வைக்கப்பட்ட 250 சவரனுக்கு அதிகமான நகைகளுடன் தலைமறைவான அடகுக் கடை உரிமையாளரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
முத்தியால் பேட்டை மார்கெட் பகுதியில் அடகுக் கடை நடத்தி வந்தவர் ஜுகில் கிஷோர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கடையைப் பூட்டிவிட்டு 250 சவரனுக்கும் அதிகமான நகைகளுடன் மாயமானார்.
இதுதொடர்பான புகாரில் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், ராஜஸ்தானில் வைத்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜுகில் கிஷோர் காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.