கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ஏடிஎம்மில் 18 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த திருடர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கலபுர்கியின் புறநகர் பகுதியில் உள்ள பேலூர் கிராஸ் தொழிற்பேட்டை அருகே ஏடிஎம் உள்ளது. அங்கு 18 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
இதனையறிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் இருவரும் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.