மகாராஷ்டிராவில் உள்ள மணி சூரத் வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பிவாண்டியில் மணி சூரத் வளாகம் உள்ளது. அங்கு யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது.
இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இந்த தீவிபத்தில் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.