பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன், பதற்றத்தைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த மன்சூர் அலி என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களுடன், பதற்றத்தைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மன்சூர் அலி மீது புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மன்சூர் அலியை கைது செய்தனர்.