தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்கள், வரும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என, தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து, சார்க் விசா மூலமாக கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளவர்களின் விவரங்களை குடியுரிமை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து சம்மன் அனுப்பி, பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தில் தங்கியுள்ள 250 பாகிஸ்தானியர்களும் வரும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானியர்கள் வெளியேறுகிறார்களா? என்பதை மாநில உளவுப்பிரிவு போலீசார் உதவியோடு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.