தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.
இந்நிலையில், தவெக கருத்தரங்கில் பங்கேற்க விஜய் வந்தபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக மாவட்ட தலைவர் சம்பத்குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் அதிகளவு கூட்டத்தை கூட்டி சேதம் விளைவித்தல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.