சித்திரை திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வரும் 29-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், மே 8-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 9-ம் தேதி திருத்தேரோட்டமும், மே 12-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறவுள்ளது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.