தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டு அமைச்சரவையில் இடம்பெற்ற செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, பிணை வேண்டுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்